Publish Date: Mon, 27 Jun 2022 (14:42 IST)
Updated Date: Mon, 27 Jun 2022 (14:44 IST)
தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் தொழிற்கல்வி படித்த மாணவர்களும் படிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கல்லூரி படிப்புகளில் சேர மாணவ, மாணவியர் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் 12ம் வகுப்பில் தொழிற்கல்வி படித்தவர்களும் பட்ட பொறியியல் படிப்பு படிக்க விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
முன்னதாக முதல் நிலை அறிவியல் சார்ந்த பாடங்களை 12ம் வகுப்பில் படித்தவர்கள் மட்டுமே பொறியியல் படிப்பில் சேர முடியும் என்று இருந்த நடைமுறை தற்போது மாற்றப்பட்டுள்ளது. இதனால் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களின் அட்மிசன் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.