கோவையில் காய்ச்சலுக்காக சிகிச்சை எடுத்துக்கொண்ட நோயாளி ஒருவரின் உடலில் உடைந்த ஊசி இருப்பது ஸ்கேனில் தெரியவந்துள்ளது.
கோவை குனியாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த தம்பிதுரை கடந்த வாரம் காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளார். இதையடுத்து காய்ச்சலுக்காக தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை எடுக்க சென்றுள்ளார். அப்போது அங்கு அவருக்கு ஊசிப் போடப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவருக்கு இடுப்புப் பகுதியில் வலி அதிகமாகி உள்ளது. இதையடுத்து வேறு மருத்துவமனைக்கு சென்ற போது அவர்கள் ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். அதில் இடுப்பு எலும்புக்கு உள்ளே உடைந்த ஊசித்துண்டு ஒன்று இருந்துள்ளது.
அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தம்பிதுரை தான் சிகிச்சை எடுத்துக்கொண்ட மருத்துவமனைக்கு சென்று இதுகுறித்து முறையிட்டுள்ளார். ஆனால் நிர்வாகம் அவருக்கு பொறுப்பான பதிலை அளிக்காமல் அலட்சியமாக இருந்துள்ளனர். இதையடுத்து அவர் அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டார். இப்போது அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.