Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபத்தில் முடிந்த இன்ஸ்டாகிராம் பழக்கம்! பள்ளி மாணவியை கடத்தி சென்று வன்கொடுமை செய்த வாலிபர்!

Prasanth Karthick
வெள்ளி, 8 மார்ச் 2024 (11:48 IST)
கன்னியாக்குமரியில் பள்ளி மாணவியை காதலிப்பதாக ஏமாற்றி கூட்டிச் சென்று வாலிபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கன்னியாக்குமரி மாவட்டம் கீரிப்பாறை பகுதியில் உள்ள பூதப்பாண்டியில் 17 வயது சிறுமி ஒருவர் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். மாணவி விடுமுறை நாட்களில் கீரிப்பாறையில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு செல்வது வழக்கம். அப்படியாக சென்றபோது ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்ற 23 வயது இளைஞர் கீரிப்பாறைக்கு வேலைக்காக வந்தபோது மாணவிக்கு அறிமுகமாகியுள்ளார்.

மாணவியிடம் இன்ஸ்டாகிராம் ஐடி, செல்போன் எண் வாங்கிய அவர் பின்னர் அதன் மூலமாக பேசி வந்துள்ளார். நாளடைவில் இருவரும் நெருங்கி பழகத் தொடங்கிய நிலையில் அடிக்கடி மாணவியை பைக்கில் வெளியே அழைத்து சென்றும் வந்துள்ளார். இப்படியாக கடந்த 19ம் தேதி மாணவியை வர சொன்ன இளைஞர் மாணவியைக் கடத்திக் கொண்டு திருப்பூருக்கு சென்றுள்ளார்.

ALSO READ: குளிர்பானத்தில் மயக்க மருந்து; இளம்பெண்ணை வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த நபர்! – சென்னையில் அதிர்ச்சி!

பள்ளிக்கு சென்ற மாணவி திரும்ப வராததால் மாணவியின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் உடனடியாக வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் மாணவிக்கும், பிரகாஷுக்கும் பழக்கம் இருந்தது தெரிய வரவே பிரகாஷின் மொபைலை ட்ராக் செய்ததில் அவர் திருப்பூரில் இருப்பது தெரிய வந்துள்ளது.

உடனடியாக மாணவியை மீட்க போலீஸார் திருப்பூர் விரைந்த நிலையில், இந்த விஷயம் தனது பெற்றோர்கள் மூலமாக தெரிய வந்த பிரகாஷ் அந்த மாணவியை அழைத்து சென்று மாணவியின் வீட்டின் முன்னால் விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

மாணவியிடம் விசாரித்ததில் மாணவியை பிரகாஷ் திருப்பூர் அழைத்து சென்று வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்ததும், மாணவியை கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து மாணவி காணாமல் போன வழக்கை போக்சோ வழக்காக மாற்றி ஆள்கடத்தல் வழக்குகளையும் சேர்த்து தப்பியோடிய சுபாஷை போலீஸார் தேடி வருகின்றனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த 5 நாள்களுக்கு வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம்: வெய்யில் கொளுத்தும்: வானிலை எச்சரிக்கை!

கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் காலமானார்..!

இந்திய தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை.. அமெரிக்காவில் பேசிய ராகுல் காந்தி..!

அம்மாவும் மகனும் சேர்ந்து அப்பாவை கொலை செய்த கொடூரம்.. அதிர்ச்சி காரணம்..!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. ரூ.50,000 சம்பளம் வாங்குபவர் ரூ.1,57,500 வாங்க வாய்ப்பு..!

அடுத்த கட்டுரையில்