Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபரிமலை கோவில் நடை திறப்பு! தரிசன நேரம் குறைப்பு! – பக்தர்களுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள்?

Webdunia
திங்கள், 16 நவம்பர் 2020 (11:42 IST)
இன்று முதல் கார்த்திகை மாத மண்டல பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் திறக்கப்பட்டுள்ள நிலையில் பக்தர்களுக்கான வழிபாட்டு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே கோவிலில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

முன்பதிவு செய்தவர்கள் 24 மணி நேரத்திற்கும் முன்னதாக எடுத்த கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

பக்தர்களை பரிசோதனை செய்ய சபரிமலை செல்லும் வழித்தடங்களில் பரிசோதனை கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தரிசனத்திற்கு காத்திருக்கும் பக்தர்கள் ஒருவருக்கொருவர் 2 அடி இடைவெளி விட்டு நிற்க வேண்டும்.

சபரிமலை வரும் பக்தர்கள் அனைவருக்கும் பம்பை நதியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள ஷவர்களில் குளிக்கலாம்.

சபரிமலை பக்தர்கள் முன்பு போல் சன்னிதானம் மற்றும் பம்பையில் தங்குவதற்கும் அனுமதி இல்லை.

மேலும் தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு உச்சிகால பூஜைகள் முடிந்து 1 மணிக்கு நடை மூடப்படும். பின்னர் மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு பூஜைகள் முடிந்து 9 மணிக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments