முதன்முறையாக உதகையில் மின்சார படகு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த படகில் பயணம் செய்ய கட்டணம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் முதல்முறையாக உதகையில் படகு இல்லத்தில் மின்சார படகு சவாரி செய்யும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மின்சார படகு சுற்றுலா பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சத்தம் இல்லாமல் சுடச்சுட டீ, பிஸ்கட், கட்லெட், சமோசா என உணவுகளை சாப்பிட்டவாறு படகில் பயணம் செய்வது மகிழ்ச்சியை அளிக்கிறது என்று சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர்.
சாதாரண படகில் செல்வதை விட மின்சார படகில் பயணம் செய்வதில் மகிழ்ச்சி அதிகம் என்று பலர் சமூக வலைதளங்களில் தங்கள் அனுபவங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், மின்சார படகில் 20 நிமிடங்கள் பயணம் செய்ய ஐந்து நபர்களுக்கு 1200 ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கட்டணம் கொஞ்சம் அதிகமாக இருந்தாலும், புதிய வித அனுபவம் கிடைப்பதாக மின்சார படகில் பயணம் செய்தவர்கள் தெரிவித்துள்ளனர்.