Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிக்கு முதல்வர் ஆசைக்காட்டி வலைவிரிக்கிறதா பாஜக கூட்டணி?

Webdunia
செவ்வாய், 8 அக்டோபர் 2019 (13:25 IST)
”அதிமுக, பாஜக கூட்டணியுடன் ரஜினி ஆட்சியை பிடிப்பார்” என அதிமுகவில் இணைந்த ராதாரவி கருத்து தெரிவித்துள்ளார்.

திமுக கட்சியில் தொடர்ந்து இருந்து வந்த நடிகர் ராதாரவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு சில பிரச்சினைகளால் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைந்தார்.

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்ததிலிருந்து அவரை தங்கள் கட்சியோடு கூட்டணி சேர்க்க பாஜக முயன்று வருகிறது. தற்போது பாஜக மற்றும் அதிமுகவில் உள்ள முக்கிய பிரமுகர்கள் கூட ரஜினி அரசியலுக்கு வருவார், ஆட்சி அமைப்பார் என்பது போல தொடர்ந்து பேசி வருகின்றன. சமீபத்தில் நடிகரும், பாஜக கட்சி பிரமுகருமான எஸ்.வி.சேகர் ரஜினிதான் அடுத்த முதல்வர் என்று பேசியிருந்தது அரசியல் வட்டாரத்தில் புகைச்சலை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் நடிகர் ராதாரவி “ரஜினி சூழ்நிலைகளை ஆராய்ந்து பொறுமையாக முடிவு எடுக்கக்கூடியவர். ஆனால் அவர் எடுக்கும் முடிவுகள் தெளிவானதாக இருக்கும். ரஜினி அதிமுக, பாஜக கூட்டணியுடன் இணைந்து கண்டிப்பாக ஆட்சியை பிடிப்பார். ரஜினி முதல்வர் வேட்பாளராக போட்டியிட்டால் கண்டிப்பாக அவர் பின்னால் நான் நிற்பேன்” என தெரிவித்துள்ளார்.

இப்படி பிரபலங்கள் தொடர்ந்து ரஜினியின் முதல்வர் கனவை வளர்த்தெடுக்கும் வகையில் பேசி வருவது அவரை மெய்யாலுமே முதல்வராக்கும் எண்ணத்தில்தானா? அல்லது முதல்வர் ஆசை காட்டி தங்கள் கூட்டணிக்குள் இணைத்து விட போட்ட திட்டமா? என அரசியல் வட்டாரங்களில் கேள்வி எழுந்துள்ளது.

எது எப்படியிருந்தாலும் தான் கட்சி தொடங்கி தனித்து போட்டியிட விரும்புவதாகவே ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அப்படி அவர் தனித்து போட்டியிடும் பட்சத்தில் அவருக்கு பல இடங்களில் நல்ல ஆதரவு கிடைக்கும், அதேசமயம் வாக்குகளும் பிரியும். அதனால் அப்படிப்பட்ட சங்கடமான நிலை உருவாகிவிடாமல் இருக்க பாஜக இப்போதிருந்தே சிந்தித்து செயலாற்றி வருகிறது. அதுமட்டுமில்லாமல் கூட்டணி கட்சிக்கு ஒரு நாயக பிம்பம் கிடைப்பது தேர்தலில் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தும் என்பதால் ரஜினியை எப்படியாவது தங்களது கூட்டணியில் இணைத்துவிட பாஜக ஆர்வம் காட்டி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments