Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்க யாருக்கும் கொரோனா இல்லை! யாரோ பொய் சொல்றாங்க! – ஈஷா யோகா மையம்

Webdunia
புதன், 1 ஏப்ரல் 2020 (11:47 IST)
ஈஷா யோக மையத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா இருக்கலாம் என வதந்திகள் வெளியான நிலையில் ஈஷா யோக மையம் அதற்கு விளக்கமளித்துள்ளனர்.

ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து மக்கள் பங்கேற்ற நிலையில், அதில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா இருக்கலாம் என மக்களிடையே அச்சம் நிலவுகிறது. அதை தொடர்ந்து ஈஷா யோக மையத்தில் உள்ள சிலருக்கு கொரோனா இருப்பதாக சமூக வலைதளங்களில் யாரோ பதிவிட அந்த தகவல் வேகமாக மக்களிடையே பரவி வருகிறது.

இந்நிலையில் தேவைப்பட்டால் ஈஷா சிவராத்திரியில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஈஷா யோகா மைய நிர்வாகம், ஈஷா யோகா மையத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா இருப்பதாக வெளியான செய்தி போலியானது, போலி செய்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசிடம் முறையிட்டுள்ளது.

மேலும் கடந்த பிப்ரவரி மாதம் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈஷா யோகா மையத்தை ஆய்வு செய்து தூய்மையாக இருப்பதாக சான்றளித்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்திய உள்ளூர் தீவிரவாதிகள்.. பலர் உயிரிழப்பு..!

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments