Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் இன்று மழை கொட்டப்போகுது!. எந்தெந்த ஊரில் தெரியுமா?...

Advertiesment
rain
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ‘தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசம் வழியாக உருவாகியுள்ள வளிமண்டல காற்றழுத்த தாழ்வு மண்டலம் சுமார் 0.9 கிலோ மீட்டர் உயரத்தில் கிழக்கு விதர்பா முதல் தமிழக பகுதிகள் வரை  நிலவுகிறது.

தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள பகுதிகளின் மேல் சுமார் 3.1 கிலோ மீட்டர் உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.இதனால் இன்று (19. 6. 2026) இன்று தமிழகத்தின் பல இடங்களிலும் புதுவை மற்றும் காரல் காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது..

அதிலும் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்கள் சில இடங்களில் இடி மின்னலுடன் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதோடு கன மழையும் பெய்யக்கூடும் எனவும் அதில் கூறப்பட்டிருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தென்னிந்தியாவின் மிகப்பெரிய கட்சி தவெக.. 2 கோடிக்கும் மேல் உறுப்பினர்கள்..