Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி 6ஆம் தேதியும் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை: பரபரப்பு அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 3 ஜனவரி 2020 (21:00 IST)
அரையாண்டு தேர்வு விடுமுறை முடிவடைந்து ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே பள்ளி கல்வித்துறை அறிவித்து இருந்தது. ஆனால் பின்னர் திடீரென இந்த உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெறுவதால் ஜனவரி 2ம் தேதிக்கு பதிலாக ஜனவரி 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் வாக்குச்சீட்டு அடிப்படையில் இந்த தேர்தல் நடந்து இருப்பதால் ஜனவரி 3ஆம் தேதியும் வாக்கு எண்ணிக்கை தொடரும் என்பதால் ஜனவரி 4 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது
 
தற்போது ஜனவரி 2 மற்றும் 3 ஆகிய இரண்டு நாட்களிலும் வாக்கு எண்ணும் பணிகள்  ஒருசில மாவட்டங்களில் மட்டும் தொடர்வதாகவும் எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஜனவரி 6ஆம் தேதி திறக்கப்படும் என்று சற்று முன்னர் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது
 
இந்த நிலையில் ஜனவரி 6ம் தேதியும் பள்ளிகள் கல்லூரிகள் திருச்சி மாவட்டத்தில் மட்டும் விடுமுறை என திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சற்றுமுன் அறிவித்துள்ளார். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அவர் அறிவித்துள்ளார். இருப்பினும் அன்றைய தேதியில் தேர்வு நடைபெறும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் இந்த விடுமுறை பொருந்தாது என்றும் வழக்கம்போல் தேர்வுகள் நடக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
இதனை அடுத்து திருச்சி மாவட்டத்தில் மட்டும் ஜனவரி 7ஆம் தேதி தான் பள்ளிகள் பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments