Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு முஸ்லிம் வேட்பாளர் கூட இல்லை.. திமுக வேட்பாளர் குறித்து ஜவாஹிருல்லா அதிருப்தி..!

Mahendran
சனி, 23 மார்ச் 2024 (15:59 IST)
திமுக அறிவித்துள்ள 21 வேட்பாளர்களில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் கூட இல்லை என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா  தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 10 வேட்பாளர்களில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டும் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்

அந்த கடிதத்தில் திமுக வேட்பாளர் தேர்வு தனக்கு மகிழ்ச்சி தரவில்லை என்றும் காங்கிரஸ் கட்சியாவது முஸ்லிம்களுக்கு உரிய வகையில் பிரதிநிதித்துவம் தரும் வகையில் வேட்பாளர் பட்டியல் இருக்கும் என்று நான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்

சமீபத்தில் திமுகவின் 21 வேட்பாளர்கள் பட்டியல் வெளியான நிலையில் அதில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இன்றி 3 பெண் வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடுகின்றனர் என்பதும் அதில் இரண்டு பேர்களான கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் வாரிசுகள் என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராமர் புராண கதாப்பாத்திரமா? இந்துக்களை அவமதிக்கிறார் ராகுல்காந்தி! - பாஜக கண்டனம்!

அமெரிக்காவுக்கு வெளியே படம் எடுத்தால் 100 சதவீதம் வரி! - ட்ரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சியில் ஹாலிவுட்!

ஐபிஎல் பார்த்தேன்! வைபவ் சூர்யவன்ஷி அபாரமாக ஆடினார்! - புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி!

7 மாவட்டங்களில் குளிர்விக்க வரும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை ஆய்வு மையம்!

திமுக பொதுக் கூட்டத்தில் திடீரென சாய்ந்த மின்கம்பம்.. நூலிழையில் உயிர் தப்பித்த ஆ ராசா..!

அடுத்த கட்டுரையில்
Show comments