Publish Date: Mon, 25 May 2026 (14:31 IST)
Updated Date: Mon, 25 May 2026 (14:33 IST)
தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி நடைபெற்று வருகிறது. கட்சியின் தலைவர் விஜய் தமிழகத்தின் முதலமைச்சர் பதவியில் அமர்ந்திருக்கிறார். தவெகவில் முதலமைச்சர் உட்பட எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் ஆகியோர்களில் பெரும்பாலானவர் அரசியலுக்கு புதியவர்கள் என்பதால் என்பதாலும், ஆட்சிக்கு வந்து இரண்டு வாரமே ஆகிவிட்ட நிலையில் புதிய அரசு பல பிரச்சனைகளும் சமாளிக்க முடியாமல் திணறுகிறது.
கோவை சூழலில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உள்ளிட்ட பல குற்றங்கள் கடந்து சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒருபக்கம் சென்னையில் இரவு நேரங்களில் பல பகுதிகளிலும் பல மணி நேரங்கள் மின்வெட்டு நிகழ்கிறது. இதனால் பொதுமக்கள் சாலைக்கு வந்து போராட்டம் நடத்தும் நிலை ஏற்பட்டது. சிலர் அப்பகுதி எம்.எல்.ஏக்களின் வீடுகளுக்கு சென்று இதுபற்றி முறையிட்டனர்.
இதுபற்றி கருத்து தெரிவித்த மின்சார துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் மின்சாரத் துறையில் சில கருப்பு ஆடுகள் இருக்கின்றன. அவர்களால்தான் இந்த பிரச்சனை வருகிறது எனக் கூறியிருந்தார். இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இந்த சம்பவம் தொடர்பாக நக்கலடிப்பது போல ஒரு பதிவை தனது எக்ஸ தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தொடர் மின்வெட்டுன்னு ஒரு கூட்டம் கிளம்பி எம்எல்ஏ வீட்டுக்கு போய் சவுண்ட கொடுத்துருக்காங்க.. அப்புறம் ஒருத்தர் வெளியே வந்து எம்எல்ஏ ஊர்ல இல்லைன்னதும் கலைஞ்சு போயிட்டாங்க...
வெளிய வந்து சொல்லிட்டு போனவர்தான் எம்எல்ஏன்னு யாருக்கும் தெரியல!..
மூஞ்ச பாத்து ஓட்டு போட்டுருந்தா தெரிஞ்சுருக்கும் பாவம் என கலாய்த்திருக்கிறார்.