Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜாமீன் கேட்டு கஜினி முகமது போல படையெடுக்கிறார் செந்தில் பாலாஜி: ஜெயக்குமார்

Webdunia
வியாழன், 19 அக்டோபர் 2023 (18:45 IST)
ஜாமீன் கேட்டு கஜினி முகமது போல் அமைச்சர்  செந்தில் பாலாஜி படையெடுத்து வருகிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
 
 செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
இந்த நிலையில்  இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்  கஜினி முகமது கூட தோற்றுப் போய்விடும் அளவுக்கு ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி படையெடுத்து வருகிறார்.  ஜாமீன் ஜாமீன் என்று கேட்டு வரும் அவருக்கு ஒரு நெத்திலி மீன் கூட கிடைக்காத நிலை தான் இருக்கிறது என்று தெரிவித்தார்.  
 
மேலும் சுகாதாரத் துறை அமைச்சர் ஒரு ஓட்டப்பந்தய வீரராக தான் இருக்கிறார். மருத்துவத்துறையில் நடைபெறும் தவறுகள் குறித்து அவர் நடவடிக்கை எடுக்கவில்லை தமிழ்நாடு சுகாதாரமான மாநிலமாக வைத்திருக்க வேண்டும் திமுக அரசுக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments