Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடிந்தால் நோட்டாவை ஜெயிச்சு காட்டட்டும்! கமலுக்கு சவால் விடுத்த ஜெயகுமார்

Webdunia
வியாழன், 7 பிப்ரவரி 2019 (21:28 IST)
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவும், மாநில கட்சிகளான அதிமுக, திமுக உள்பட அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. எந்த ஒரு கட்சியும் தனித்து போட்டியிடப்போவதாக இதுவரை அறிவிக்கவில்லை

இந்த நிலையில் கட்சி ஆரம்பித்த ஒரே ஆண்டில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்கவுள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி என அறிவித்துள்ளது. கமலின் இந்த அறிவிப்பு அனைத்து கட்சிகளுக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

இந்த நிலையில் கமல் கட்சி தனித்து போட்டியிடுவது குறித்து கருத்து கூறிய அமைச்சர் ஜெயகுமார், 'தனித்து போட்டியிடும் நடிகர் கமல்ஹாசன் முடிந்தால் நோட்டாவை விட அதிக வாக்குகளை பெற்று  காட்டட்டும்' என்று கூறியுள்ளார். ஜெயகுமாரின் இந்த கருத்துக்கு பதில் கூறிய கமல்ஹாசன், 'அனைவரும் கண்களை கட்டிக்கொண்டு சிலம்பம் ஆடுகின்றனர், எங்கள் பலம் என்ன என்பதை தேர்தலுக்கு பின் தெரிந்து கொள்வார்கள் என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments