Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸாய் வீசும் ஜெகன் அண்ணா வேவ்ஸ்... ஆந்திராவில் இல்ல இம்முறை தமிழகத்தில்!

Webdunia
திங்கள், 4 நவம்பர் 2019 (12:35 IST)
தமிழகத்தில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பேரவை துவங்குவதற்காக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஆந்திராவில் நடைபெற்ற முடிந்த சட்டபேரவை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக பதவியேற்றது முதல் ஜெகன் மோகன் ரெட்டி மக்களுக்காக பல அதிரடி திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார். 
 
இந்நிலையில், தமிழகத்தில் பாஸ்கர் என்பவர் பேஸ்புக் மூலமாக ஜெகன் மோகன் ரெட்டி பேரவை எனும் பெயரில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை சேர்த்து வருகிறார். அதன்படி வாணியம்பாடியில் திருமண மண்டபம் ஒன்றில் ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற்றது. 
 
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக ஆந்திர மாநில பிரச்சார அணி தலைவர் ராஜா கலந்துக்கொண்டார். இந்த கூட்டத்தில் ஜெகன் மோகன் ரெட்டி மக்களுக்கு ஆற்றி வரும் சிறப்பான ஆட்சி மற்றும் சலுகைகள் குறித்து விவரிக்கப்பட்டதோடு ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக என்ற இயக்கத்தை ரெய்டுகள் அசைத்து கூட பார்க்க முடியாது: ஈபிஎஸ்

அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது: அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களின் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்