Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் பள்ளி திறக்கும் தேதி அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 21 மே 2019 (17:51 IST)
தமிழக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தற்போது நடந்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக மிக அதிகமாக வெயில் அடித்து கொண்டிருப்பதால் பள்ளி திறக்கும் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் தரப்பில் அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது. இதுகுறித்து முதல்வரிடம் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
 
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் வரும் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் பள்ளிகள் திறக்கப்படும் அன்றே புத்தகம், நோட்டு உள்ளிட்ட விலையில்ல பொருட்கள் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கவேண்டும் என்றும் அதற்கான ஏற்பாடுகளை இப்போது முதலே கவனிக்க வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை ஒன்றின் மூலம் அறிவுறுத்தியுள்ளது.
 
அக்னி நட்சத்திர வெயில் கடந்த 4ஆம் தேதி தொடங்கிய நிலையில் வரும் 29ஆம் தேதி முடிவடைகிறது. சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் அனல்காற்று வீசி வருகிறது. காலை 11 முதல் மாலை 4 மணி வரை வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை செய்திருக்கும் இந்த நிலையில் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகளை திறப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments