Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக கூட்டணிக்கு 163 இடங்கள்: ஜூனியர் விகடன் கருத்துக்கணிப்பு!

Webdunia
புதன், 31 மார்ச் 2021 (08:12 IST)
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஐந்து கூட்டணிகள் தமிழகத்தில் போட்டியிடுகின்றன. ஆனால் அதிமுக மற்றும் திமுக கூட்டணிக்கு இடையில் மட்டும்தான் உண்மையான போட்டி நடைபெறுவதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் அணி எது என்பது குறித்த கருத்துக்கணிப்புகள் கடந்த சில வாரங்களாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. ஏற்கனவே வெளிவந்த பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் திமுக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று கூறி வருகிறது 
 
இந்த நிலையில் தற்போது ஜூனியர் விகடன் நடத்திய கருத்து கணிப்பில் அதே தகவல்கள் வெளிவந்துள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு 163 இடங்கள் கிடைக்கும் என ஜூனியர் விகடன் கணித்துள்ளது. இதில் திமுக மட்டும் தனித்து 125 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்றும்,  காங்கிரஸ் 19 தொகுதிகள்,  மதிமுக 5 தொகுதிகள், மார்க்கிஸ்ட் 2 தொகுதிகள்,  இந்திய கம்யூனிஸ்ட் 4 தொகுதிகள்,  விசிக மற்றும் முஸ்லீம் லீக் தலா 2 தொகுதிகள்,  தமிழர் வாழ்வுரிமை கட்சி, பார்வார்ட் பிளாக், மனித நேய மக்கள் கட்சி தலா ஒரு தொகுதியில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி மாறினால் கலைஞர் சிலைகள் உடைக்கப்படும்? - சீமான் பேச்சால் சர்ச்சை!

இந்தியாவில் Sony Playstationக்கு அனுமதி இல்லையா? கேம் பிரியர்கள் அதிர்ச்சி! - என்ன காரணம்?

பா.ஜ.க-வுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்..!

வயநாடு இடைத்தேர்தல்.. இன்றுடன் பிரச்சாரம் முடிவு.. ராகுல் - பிரியங்கா தீவிரம்..!

இது வெறும் டிரைலர் தான்.. சென்னை மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments