Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரும், ஆனா வராது: அதிமுக-பாஜக கூட்டணி குறித்து கி.வீரமணி

Webdunia
வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (07:00 IST)
வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் அதிமுக-பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தாலும் இந்த கூட்டணி ஏற்படுமா? ஏற்படாதா? என்ற சந்தேக நிலையே பலரிடம் உள்ளது.

இந்த நிலையில் அதிமுக-பாஜக கூட்டணி வருமா? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, 'இந்த கேள்வியை நீங்கள் கேட்டதும் எனக்கு வடிவேல் நகைச்சுவை வசனம் ஒன்றுதான் ஞாபகம் வருகிறது. அதிமுக-பாஜக கூட்டணி வரும், ஆனால் வராது' என்று கிண்டலுடன் பதிலளித்தார்.

பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என தம்பிதுரை எம்பி, பொன்னையன் உள்ளிட்டோர் கூறி வரும் நிலையில் அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்டோர் பாஜகவை கூட்டணியில் சேர்த்து கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

பாஜகவை கூட்டணியில் சேர்த்து கொள்வது குறித்து முதல்வரும், துணை முதல்வரும் பிடிகொடுக்காமல பேசி வருவதால் இந்த கூட்டணி ஏற்படுமா? ஏற்படாதா? என்ற சந்தேகம் அதிமுக தொண்டர்களுக்கே ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 வயதுடைய 20 பெண்களை சீரழித்த திமுக நிர்வாகி?? ’டம்மி அப்பா’ அரசு நடவடிக்கை எடுக்குமா? - எடப்பாடியார் கேள்வி!

விளையாடிய சிறுவர்கள்... திடீரென மூடிய கார் கதவு! மூச்சுத் திணறி பரிதாப பலி!

தமிழகத்தை போலவே ஆந்திராவில் பெண்களுக்கு இலவச பேருந்து: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

அமைச்சரின் வருகையின் போது GOBACK சொன்ன திமுக நிர்வாகிகள்.. திமுக தலைமை நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments