Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.219 கோடியில் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் -உதயநிதி டுவீட்

Webdunia
சனி, 15 ஜூலை 2023 (14:37 IST)
''கல்விக்கு ஓர் கோட்டமாக ரூ.219 கோடியில் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை நம் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவர்கள் இன்று திறந்து வைக்கவுள்ளார்கள்''  என்று உதய நிதி தெரிவித்துள்ளார்.

#கலைஞர்  நூற்றாண்டை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல திட்டங்களை செயல்படுத்தி  வருகிறது. 

இத ஒருபகுதியாக மதுரையில், 2 இலட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில் அடித்தளம், குரைத்தளம், அதனுடன் 6 தளங்களைக் கொண்டு 120 கோடியே 75 இலட்ச ரூபாய் செலவில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

இன்று கல்விக் கண் திறந்த காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் முக.ஸ்டாலின் இந்த நூலகத்தை திறந்து வைக்கிறார்.

இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன் டுவிட்டர் பக்கத்தில்,

‘’தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பெரியவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் இன்று. தொடக்கக் கல்வி பெறுவதே பெருங்கனவாக இருந்த காலத்தில் மதிய உணவு மூலம் ஏழை-எளிய பிள்ளைகளை பள்ளி நோக்கி வரச்செய்த காமராஜர் பிறந்த ஜூலை 15ஐ, கல்வி வளர்ச்சி நாளாக முத்தமிழறிஞர் அவர்கள் அறிவித்தார்கள்.

கல்விக்கு ஓர் கோட்டமாக ரூ.219 கோடியில் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை நம் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவர்கள் இன்று திறந்து வைக்கவுள்ளார்கள்.

கல்வி கடைக்கோடி வரை சென்றுசேர உழைத்த காமராஜரின் பணிகளை இந்நாளில் நினைவுகூர்வோம்!’’ என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்களுக்கு அபாண்டமான அபராதம் - வரலாற்று துரோகம்..! மத்திய மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்.!

டெண்டர் முறைகேடு புகார்.! எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் வழக்குப்பதிவு.!!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments