Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

மீண்டும் ஒரு மின்வெட்டா? கடந்தகால திமுக அரசை சுட்டிக்காட்டிய கமல்ஹாசன்

மீண்டும் ஒரு மின்வெட்டா? கடந்தகால திமுக அரசை சுட்டிக்காட்டிய கமல்ஹாசன்
, ஞாயிறு, 10 அக்டோபர் 2021 (11:06 IST)
கடந்த 2008-2011 திமுக ஆட்சிக்‌ காலத்தில்‌ நிலவிய கடுமையான மின்வெட்டால்‌, தமிழகத்தின்‌ விவசாயமும்‌ தொழிந்துறையும்‌ மருத்துவச்‌ சேவைகளும்‌ கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியதாகவும், அதேபோல் மீண்டும் ஒரு மின்வெட்டு ஏற்பட்டால் தமிழகம் தாங்காது என்றும் கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது:
 
தமிழகத்தின்‌ தினசரி மின்தேவை 1400 மெகாவாட்‌. கோடைக்காலத்தில்‌ இது சுமார் 11000 மெகாவாட்‌ வரை உயரும்‌, தமிழகத்தில்‌ உள்ள அனல்மின்‌ நிலையங்கள்‌ மூலமாக தினமும்‌ 4,320 மெகாவாட்‌ வாட் மின்  உற்பத்தி நிகழ்கிறது.
 
அனல்மின்‌ நிலையங்கள்‌ தடையின்றி இயங்க, நிலக்கரி அவசியம்‌, அனல்மின்‌ நிலையங்களில்‌, "4 நாட்களுக்குத்‌ தேவையான நிலக்கரி இருப்பு வைத்திருப்பது வழக்கம்‌. ஆனால்‌, தமிழகத்தின்‌ மின்‌ உற்பத்தி மற்றும்‌ பகிர்மானக்‌ கழகத்தின்‌ கட்டுப்பாட்டில்‌ வரும்‌ வடசென்னை, தூத்துக்குடி, மேட்டு! அனல்மின்‌ நிலையங்களில் வெறும்‌ நான்கு நாட்களுக்கான நிலக்கரியே உள்ளதாக நாளிதழ்‌ செயதிகள்‌ தெரிவிக்கின்றன
 
இதன்‌ காரணமாக மின்‌ உற்பத்தி பாதிக்கப்பட்டு தமிழகத்தில்‌ மின்வெட்டு ஏற்படும்‌ சூழல்‌ உருவாகலாம்‌ என‌ அச்சம்‌, தொழித்துறையினர்‌ உள்ளிட்ட அனைத்துத்‌ தரப்பினரையும் சூழ்ந்துள்ளது
 
கடந்த 2008-2011 திமுக ஆட்சிக்‌ காலத்தில்‌ நிலவிய கடுமையான மின்வெட்டால்‌, தமிழகத்தின்‌ விவசாயமும்‌ தொழிந்துறையும்‌ மருத்துவச்‌ சேவைகளும்‌ கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின. கோவை, திருப்பூர்‌ கரூர்‌, சிவகாசி போன்ற தொழில்‌ நகரங்களின்‌ பொருளியல்‌ சிதைவுகளுக்கு உள்ளாகின. பல தொழில், நிறுவனங்கள்‌, வேறு மாநிலங்களுக்கு தங்கள்‌ தொழிலை மாற்றிக்கொண்டன. மீண்டும்‌ அப்படி ஒரு சூழல் தமிழகத்தில்‌ உருவாகிட அனுமதிக்கக்‌ கூடாது.
 
பொருளாதார மந்தநிலையாலும், கொரோனோ பெருந்தொற்றினாலும்‌, பெட்ரோல்‌ டீசல்‌ விலை உயர்வினாலும்‌ தமழ்‌ மக்களின்‌ வாழ்வாதாரம்‌ பாதிக்கபட்டுள்ளது.  நீண்டகாலத்திற்கு பிறகு பள்ளிகள்‌ திறக்கப்பட உள்ளன பண்டிகைக்‌ கால விற்பனைக்கு வியாபாரிகள்‌ தயாராகிவருகிறார்கள்‌, மருத்துவமனைகளுக்கும்‌, விவசாயிகளுக்கும் தடையற்ற மின்சாரம் அத்தியாவசியம். இந்த சூழ்நிலையில் மீண்டும் ஒரு மின்வெட்டு காலகட்டம் ஏற்பட்டால்‌ தமிழகம்‌ நிச்சயம்‌ தாங்காது.
 
திமுக அரசு, தேவையான நிலக்கரியை மத்திய அரசிடம்‌ கேட்டும்‌ பெற விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசும் நிலக்கரி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்‌ என்று மக்கள்‌ நீதி மய்யம்‌ வலியுறுத்துகிறது.
 
இவ்வாறு கமல்ஹாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விரைவில் இல்லத்தரசிகளுக்கு ரூ.1000! – அமைச்சர் கே.என்.நேரு தகவல்!