Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியர்களுக்கு சம்பளம் இல்லை; சொகுசு விடுதி எம்.எல்.ஏக்களுக்கு? - கமல்ஹாசன் கேள்வி

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (11:15 IST)
வேலை நிறுத்தம் செய்யும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இல்லையெனில், சொகுசு விடுதியில் தங்கியுள்ள எம்.எல்.ஏக்களுக்கு மட்டும் எப்படி ஊதியம் கொடுக்கிறீர்கள் என நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.


 

 
வேலை நிறுத்தம் செய்யும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இல்லையெனில், சொகுசு விடுதியில் தங்கியுள்ள எம்.எல்.ஏக்களுக்கு மட்டும் எப்படி ஊதியம் கொடுக்கிறீர்கள் என நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட பல கோரிக்கைகளை முன்னிறுத்தி, ஜாக்டோ ஜியோ உள்ளிட சில அமைப்புகளை சேர்ந்த அரசு ஊழியர்கள் கடந்த சில நாட்களாக அரசுக்கு எதிராக போராட்டம் செய்து வருகின்றனர்.
 
அந்நிலையில், பள்ளிக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. 
 
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் “வேலைக்கு செல்லவில்லை என்றால் சம்பளம் இல்லை என்பது அரசு ஊழியர்களுக்கு மட்டும்தானா?. சொகுசு விடுதியில் தங்கி குதிரை பேரம் நடத்திக் கொண்டிருக்கும் எம்.எல்.எக்களுக்கு மட்டும் எப்படி ஊதியம் கொடுக்கப்படுகிறது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
 
மேலும் “வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஆசிரியர்களை நீதிமன்றம் எச்சரித்துள்ளது. அதேபோல், மக்கள் பணி செய்யாமல் சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏக்களையும் நீதிமன்றம் எச்சரிக்க வேண்டும்” என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை இன்னும் தலைவர் போல் பேசுகிறார்.. நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்

நீட் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த 2 மாணவர்கள் தற்கொலை.. தோல்வி பயமா?

போரில் வென்றால் மாதுரி தீட்சித் எனக்கு தான்: பாகிஸ்தான் மதகுரு சர்ச்சை பேட்டி..!

பயங்கரவாத தாக்குதல் மோடிக்கு முன்னரே தெரியுமா? காஷ்மீர் பயணம் ரத்து ஏன்? கார்கே

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் 24 மணி நேரத்தில் 5 கொலைகள்: ஈபிஎஸ் புள்ளிவிபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments