Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவில் ஒருவரையும் சந்திக்க மாட்டேன் : கமல்ஹாசன் உறுதி

Webdunia
செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (11:19 IST)
அதிமுகவில் யாரையும் நான் சந்திக்கப் போவதில்லை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

 
அரசியலுக்கு வருவதாய் அறிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், வருகிற 21ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து தனது பயணத்தை துவங்குவதாக அறிவித்துள்ளார்.   
 
மேலும், முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன்,மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் தனிச்செயலாளராக பணியாற்றிய, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான செல்வராஜ், இந்திய கம்யூனிஸ் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, திமுக தலைவர் கருணநிதி மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரை அவர் சந்தித்து பேசினார். 
 
இந்நிலையில், இன்று காலை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் வீட்டிற்கு சென்று அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்..
 
அப்போது, அனைவரையும் சந்தித்து பேசுகிறீர்கள். அதிமுக தலைவர்களை யாரேனும் சந்திப்பீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கமல்ஹாசன் “அவர்கள் ஆட்சி சரியில்லை என நான் தொடர்ந்து கூறி வருகிறேன். எனவே, அவர்களில் யாரையும் நான் சந்திக்கப் போவதில்லை” என உறுதி பட தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments