Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருந்துக்காக காத்து கிடக்காங்க.. நேரத்தை நீட்டிக்கணும்! – கமல்ஹாசன் கோரிக்கை!

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2021 (15:42 IST)
தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி நடவடிக்கை எடுக்குமாறு கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனாவுக்கு எதிராக செயல்படும் ரெம்டெசிவிர் மருந்தின் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ரெம்டெசிவிர் மருந்துக்கு தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் பற்றாக்குறை எழுந்துள்ளது.

இந்நிலையில் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து விநியோகிக்கப்படுகிறது. ஆனால் நாள் முழுவதும் காத்திருக்கும் அனைவருக்கும் மருந்து கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள கமல்ஹாசன் “ரெம்டெசிவிர் மருந்து விற்கும் மையங்களில் மக்கள் மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கிறார்கள். விற்பனை நேரத்தை அதிகரிக்க வேண்டும். விற்பனை மையங்களின் எண்ணிக்கையையும் உடனடியாக அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments