Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொண்டர்களுக்கு விருந்து வைக்கும் கமல்ஹாசன்

Webdunia
வெள்ளி, 24 மே 2019 (18:50 IST)
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக பெருவாரியான தொகுதிகளை பிடித்தது. பெரிய மாநில கட்சிகளே கூட்டணியோடு களம் கண்ட தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் சட்டப்பேரவை தேர்தலை கூட தொடாமல் கட்சி தொடங்கிய வேகத்தில் மக்களவை தேர்தலில் கால் வைத்தார்.

இவரோடு போட்டியிட்ட மற்ற கட்சிகளான அமமுக, நாதக எல்லாம் ஓரளவு செல்வாக்கு பெற்ற கட்சிகளே! அப்படி இருந்தும் மக்களவை தொகுதிகளில் 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி அடையாவிட்டாலும் மூன்றாம் இடத்தையாவது பெற்றார். தேர்தலில் மநீம பெற்ற மொத்த வாக்குகள் சுமார் 14,74,946. இவருக்கு முன்னாலேயே கட்சி தொடங்கிய சீமான் 15,49,751. இப்போ கட்சி தொடங்கி இவ்வளவு பக்கமா வந்துட்டாங்களே என நாம் தமிழர் தம்பிகள் கடுப்பில் இருக்க, மய்யத்து தொண்டர்களை குஷிப்படுத்தும் வகையில் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார் கமல்ஹாசன்.

இந்த அளவுக்கு அதிக வாக்குகள் பெற உதவிய மய்யத்து தொண்டர்களுக்காக மே 26 ம் தேதி நடைபெறும் விருந்தில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள் அனைவரையும் கலந்து கொள்ள வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார் கமல்ஹாசன்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments