Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் தந்தை காமராஜர்.. என் சொத்து எம்ஜிஆர்! – கமல்ஹாசன் பேச்சு!

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (11:21 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள கமல்ஹாசன் எம்ஜிஆர் தனது சொத்து என பேசியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் நிலையில் மநீம வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க கமல்ஹாசன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அவ்வாறாக திருச்சி அருகே திருவெறும்பூரில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் “காமராஜர் என் தந்தை, எம்ஜிஆர் என் சொத்து. எங்களுக்கு அரசியல் தொழில் அல்ல. நான் 234 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்கிறேன். எங்கும் திறந்து கிடக்கும் சாக்கடை, குழியான சாலைகள். எங்கள் வேட்பாளர்கள் அரசியல் அனுபவம் இல்லாவிட்டாலும் மக்கள் சேவையில் அனுபவம் உள்ளவர்கள்.

எடப்பாடி பழனிசாமியும், மு.க.ஸ்டாலினும் ஒருவரை ஒருவர் எவ்வளவு ஊழல் செய்தார்கள் என தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த ஊழல் பணம் மக்களாகிய உங்கள் பணம். வருகிற ஏப்ரல் 6ம் தேதி சரித்திரத்தை மாற்றுவோம்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

இம்ரான்கானின் அனைத்து சமூக வலைத்தளங்களுக்கும் தடை.. மோடி அரசின் இன்னொரு அதிரடி..!

அவசர அவசரமாக பிரதமரை சந்தித்த விமானப்படை, கப்பல் படை தலைவர்கள்.. இன்று போர் ஆரம்பமா?

ஜம்மு அணையில் இருந்து பாகிஸ்தான் செல்லும் தண்ணீர் நிறுத்தம்.. மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்..!

நீட் தேர்வுக்காக இப்படி அடம்பிடிப்பது நியாயமே அல்ல! - மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments