Publish Date: Wed, 08 Aug 2018 (13:15 IST)
Updated Date: Wed, 08 Aug 2018 (13:18 IST)
திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மரணமடைந்தார். அவரின் மரணம் திமுக தொண்டர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் தொடர்ச்சியாக அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, அவரின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் என திமுக தலைமை அறிவித்துள்ளது. ராஜாஜி ஹாலில் இருந்து சிவானந்தா சாலை, வாலாஜா சாலை வழியாக அண்ணா சதுக்கும் வரை அவரின் இறுதி ஊர்வலம் செல்ல இருக்கிறது” என அறிவிக்கப்பட்டுள்ளது.