Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்புவின் கன்னத்தில் அறைந்த கருணாநிதி - ஏன் தெரியுமா?

Webdunia
வெள்ளி, 10 ஆகஸ்ட் 2018 (13:33 IST)
திமுக தலைவர் கருணாநிதியிடம் தான் அறை வாங்கிய விவகாரத்தை நடிகர் சிம்பு வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

 
உடல்நலக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ம் தேதி மாலை மரணமடைந்தார்.
 
இந்நிலையில், நடிகர் சிம்பு பிரபல வார இதழ் ஒன்றுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:
 
கலைஞர் கருணாநிதி தாத்தாவுடன் எனக்கு நெருங்கிய நட்பு உண்டு. ஒரு வேலையை சரியாக செய்ய முடியவில்லை எனில் அவரிடம்தான் சந்தேகம் கேட்பேன். ஒருமுறை அவர் என் வீட்டிற்கு வந்த போது அவரின் பேனாவை திருடி வைத்துக்கொண்டேன். வல்லவன் படம் நான் இயக்கிக் கொண்டிருந்த போது அந்த படத்தை தனக்கு போட்டு காட்டுமாறு கலைஞர் என்னிடம் கூறியிருந்தார். ஆனால், சில  காரணங்களால் அது முடியாமல் போய்விட்டது. அதன்பின், அவரின் குடும்ப விழா ஒன்றுக்கு நான் சென்றிருந்தேன். அப்போது, என்னைக் கண்டதும் பளார் என ஒரு அறை விட்டார். 
 
எனக்கு ஏன் வல்லவன் படத்தை போட்டுக்காட்டவில்லை. அடுத்த படத்தை காட்டவில்லை எனில் இன்னொரு கன்னத்திலும் அறை விழும்” என உரிமையாக கோபித்துக்கொண்டார்” என சிம்பு கருணாநிதியுடனான அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதியில் ரூ.500 கோடி செலவில் 10 மாடி பஸ் நிலையம்.. ஆந்திர அரசு அறிவிப்பு..!

2026 தேர்தலில் தனித்து போட்டி.. சீமான் அறிவிப்பு.. 4 அணிகள் போட்டியா?

மீண்டும் ரூ.70,000ஐ தாண்டிய தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.280 உயர்வு..!

முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு தீவிரமான புற்றுநோய்.. அமெரிக்க மக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments