Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் வீட்டில் கல் எறிய சொன்னதே ஸ்டாலின்தான்! – குஷ்பூ பகீர் குற்றச்சாட்டு!

Webdunia
புதன், 13 ஜனவரி 2021 (11:32 IST)
தான் திமுகவில் இருந்தபோது தன் வீட்டில் கல் எறிந்தவர்கள் ஸ்டாலின் சொல்லிதான் எறிந்தார்கள் என குஷ்பூ பேசியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு பாஜக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அவ்வாறாக கன்னியாக்குமரி மாவட்டம் அருமனையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் குஷ்பூ கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் ”நான் இஸ்லாமிய பெண்ணாக இருந்தாலும் குங்குமம் வைப்பதில் பெருமிதம் அடைகிறேன். மதம் பெரியது கிடையாது. ஆனால் ஒரு மதத்தை மட்டும் அவதூறாக பேசுவது தவறு. நான் திருமாவளவனுக்கு சவால் விடுகிறேன். தைரியம் இருந்தால் இஸ்லாமிய மதத்திற்கு எதிராக அவர் பேசட்டும். பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி கிடையாது” என பேசியுள்ளார்.

மேலும் “நான் திமுகவில் இருந்தபோது மர்ம நபர்கள் என் வீட்டில் கல் எறிந்தார்கள். இதுகுறித்து தெரிவிக்க நான் ஸ்டாலினை சந்திக்க முயன்றபோது எனக்கு அனுமதி தரவில்லை. பின்னர் ஸ்டாலின்தான் கல் எறிய சொன்னார் என்பது எனக்கு பின்னர் தெரிந்தது” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments