Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூன் 28 வரை நீதிமன்ற காவலில் கிஷோர் கே ஸ்வாமி!

Webdunia
திங்கள், 14 ஜூன் 2021 (12:18 IST)
இன்று காலை கைது செய்யப்பட்ட கிஷோர் கே ஸ்வாமி ஜூன் 28 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட உள்ளார்.

சமூகவலைதளங்களில் திராவிட அரசியலையும் அதன் தலைவர்களையும் கடுமையாக விமர்சனம் செய்பவர் கிஷோர் கே ஸ்வாமி. இவருக்கு பலத்த எதிர்ப்புகளும் ஆதரவுகளும் உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி குறித்தும் அவதூறு கருத்து வெளியிட்டுள்ளார். மேலும் இவர் பெண் பத்திரிக்கையாளர் பொருத்தும் அவதூறு கருத்துக்களை பதிவு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறதுஇதனை அடுத்து எழுந்த புகாரின் அடிப்படையில் இன்று காலை கிஷோர் கே ஸ்வாமி கைதுசெய்யப்பட்டார் 

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக ஐடி விங் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள அவர் ஜூன் 28 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட உள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இவரின் கைதுக்கு சமூக வலைதளங்களில் ஒரு சாரார் ஆதரவும், ஒரு சாரார் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments