Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம்.. சாயும் நிலையில் உயர் மின்னழுத்த கோபுரம்.. தீவிர கண்காணிப்பு..!

கொள்ளிடம்
Mahendran
வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (12:02 IST)
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவரும் நிலையில் உயர் மின்னழுத்த கோபுரத்தின் கான்கிரீட் தூண்கள் சாயும் நிலையில் இருப்பதால் அந்த பகுதிக்கு யாரும் செல்லாமல் இருக்க கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

கர்நாடக மாநிலத்தில் கன மழை பெய்ததை அடுத்து தண்ணீர் அதிகமாக திறந்து விடப்பட்டது. இதனை அடுத்து கொள்ளிடம் ஆற்று பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவரும் நிலையில் பாதுகாப்பு நடவடிக்கையாக கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் இருந்த மக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

மேலும் மண் அரிப்பை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட தடுப்பணை உடைந்து சேதம் அடைந்துள்ளதை அடுத்து கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் காவல் துறையினர் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றில் சாயும் நிலையில் உயர் மின்னழுத்த கோபுராத்தின் காங்கிரிட் தூண்கள் இருப்பதால் அந்த பக்கம் யாரும் சென்று விடாமல் இருப்பதற்காக பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

மேட்டூர் அணையிலிருந்து அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது என்பது அந்த பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments