Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழனிச்சாமியை முதல்வராக ஏற்பவர்களுக்கே கூட்டணியில் இடம்... கே.பி.முனுசாமி!!

Webdunia
சனி, 10 அக்டோபர் 2020 (13:37 IST)
எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்களுக்கே கூட்டணியில் இடம் என கே.பி.முனுசாமி பேச்சு.
 
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவில் எழுந்த முதல்வர் வேட்பாளர் சர்ச்சைகள் ஓய்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியே அடுத்த முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அதிமுகவினர் குழப்பமின்று தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர். 
 
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது முதல்வர் இல்லத்தில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். முன்னர் தமிழக பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தற்போது உள்ள கூட்டணி நாடாளுமன்ற தேர்தலுக்காக ஏற்படுத்தப்பட்ட கூட்டணி.  
 
சட்டமன்ற தேர்தலுக்காக கூட்டணி அமைக்கப்படும். அந்த கூட்டணியானது திமுகவுடனும் இருக்கலாம், அதிமுகவுடனும் இருக்கலாம் அல்லது இரண்டும் இல்லாமலும் கூட இருக்கலாம். சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணியில் மாற்றங்கள் ஏற்படும் என கூறினார்.  
 
இதனிடையே இது குறித்து பாஜக தமிழக தலைவர் எல்.முருகனிடம் கேட்ட போது, இதற்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார். இந்நிலையில், தேசிய கட்சியோ, மாநில கட்சியோ பழனிசாமியை அதிமுக முதல்வர் வேட்பாளராக ஏற்போரே கூட்டணியில் இருக்க முடியும். அவரை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட்டணியில் இருக்க முடியாது என கே.பி.முனுசாமி தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments