Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரங்கணி காட்டுத் தீ விபத்து - மே 2-ந் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

Webdunia
புதன், 25 ஏப்ரல் 2018 (07:42 IST)
குரங்கணி காட்டுத் தீ விபத்து குறித்த வழக்கின் விசாரணையை தேசிய பசுமை தீர்ப்பாயம் மே 2-ந் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. 
போடி அருகே மேற்கு தொடர்ச்சி மலையான குரங்கணி  மலைப்பகுதியிலுள்ள ஒத்தமரம் பகுதியில்  ஏற்பட்ட தீவிபத்தில் மலையேற்ற பயிற்சிக்கு சென்று திரும்பி கொண்டிருந்த 36 பேர் சிக்கினர். இதில் 23 பேர் பலியாயினர்.
 
தமிழக சட்டசபையில் தீ விபத்து குறித்து நீதி விசாரணை செய்து 2 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்திட உத்தவிடப்பட்டுள்ளது. அதன்படி ஐ.ஏ.எஸ் அதிகாரி அதுல்யமிஸ்ரா சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 
குரங்கணி காட்டுத் தீ விபத்து குறித்து நேற்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் விசாரனை நடைபெற்றது. அப்போது தமிழக அரசின் வக்கீல் ராகேஷ் சர்மா ஆஜராகி இந்த சம்பவம் குறித்த தமிழக அரசின் அறிக்கையை தாக்கல் செய்தார்.
 
அதில் விபத்து குறித்து  விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருப்பதால் அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 2 மாத கால அவகாசம் தேவை என கோரிக்கை விடுத்தார்.
 
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கின் மீதான விசாரணையை மே 2-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments