Publish Date: Sun, 15 Nov 2026 (09:35 IST)
Updated Date: Sun, 15 Nov 2026 (09:39 IST)
நடிகர் விஜய் பல வருடங்களுக்கு முன்பு காங்கிரஸில் இணைய விரும்பி டெல்லி சென்று ராகுல் காந்தியை சந்தித்தார். ஆனால் என்ன காரணத்தினாலோ அது நடக்கவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி விஜய் தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராகிவிட்டார்.
மேலும், தவெகவுக்கு காங்கிரசும் ஆதரவு கொடுத்துள்ளது. காங்கிரசுக்கு அமைச்சர் பதவிகளை விஜய் கொடுத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் விஜய் பல வருடங்களுக்கு முன்பே காங்கிரஸில் இணைய விரும்பினார்.. ஆனால் காங்கிரஸ் அப்போதைய காங்கிரஸ் தலைவர்கள் அவரை தடுத்துவிட்டனர் என கூறியிருந்தார்.
இந்நிலையில், விஜய் காங்கிரஸில் இணைய விரும்பிய நேரத்தில் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த கேவி தங்கபாலு இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய போது 2009ம் வருடம் விஜய் ராகுல் காந்தியை சந்தித்தபோது அவருக்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை கொடுக்கலாம் என நான் பரிந்துரைத்தேன். அதையும் தாண்டி அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்குவது பற்றியும் ஆலோசனை செய்தோம்..
அதுமட்டுமல்லாமல் அவருக்காக எனது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை கூட விட்டுக் கொடுக்க தயார் என நான் தேசிய தலைமையிடம் தெரிவித்தேன். விஜய் காங்கிரஸில் சேர விஜய் ஆர்வமாக இருந்தார். தேசிய தலைமையும் ஆர்வம் காட்டியது. ஆனால் அப்போது நிலவிய பல்வேறு அரசியல் சூழல்களால் அந்த முயற்சி கைகூடவில்லை... வரலாற்றை திருத்தி எழுதுவது சரியல்ல என்று அவர் கூறியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்.....
மேலும் படிக்க