Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போட்டியே கிடையாது எம்.பி தேர்தலில் நேரடியாக வெற்றி பெறும் எல்.முருகன்!

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (13:03 IST)
மத்தியப் பிரதேசத்தில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் வேட்பு மனு தாக்கல். 

 
மத்திய அரசு நிர்வாக வசதிக்காக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட போது மத்திய அமைச்சகத்தில் புதிய துறைகள் ஏற்படுத்தப்பட்டது. அப்போது புதிய அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர். அதில் தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகனுக்கு 3 துறைகளில் மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 
 
இந்நிலையில் மத்திய இணை அமைச்சராக இருந்த எல்.முருகன் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வாகிறார். இதனிடையே மத்தியப் பிரதேசத்தில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
 
இந்தநிலையில் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்பி தாவர்சந்த் கெலாட் கர்நாடகா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனால் அவர் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார். காலியான அந்த இடத்துக்கு தான் முருகன் எம்பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தற்போது மத்தியப் பிரதேசத்தில் இருந்து முருகன் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்கு: தவெக முக்கிய அறிவிப்பு..!

நாளை போர் பாதுகாப்பு ஒத்திகை.. என்னென்ன நடக்கும்?

நேரில் ஆஜராகாவிட்டால்?... அமைச்சர் மா சுப்பிரமணியனுக்கு சிறப்பு நீதிமன்றம் எச்சரிக்கை.

நாளை நாடு முழுவதும் போர் ஒத்திகை.. தமிழகத்தில் எங்கே? தலைமை செயலகத்தில் ஆலோசனை..!

2 அணைகள் முழுவதும் மூடல்! பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்தியது இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments