Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் ஓட்டுப்போட மாட்டார்கள் என ஸ்டாலினுக்கு தெரிந்து விட்டது: எல் முருகன்

Webdunia
திங்கள், 14 டிசம்பர் 2020 (13:29 IST)
கடவுள் இல்லை என்று சொன்னால் இனி மக்கள் ஓட்டு போட மாட்டார்கள் என்பது ஸ்டாலினுக்கு தெரிந்துவிட்டது என பாஜக தமிழக தலைவர் வேல்முருகன் அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கடவுள் மறுப்பு கொள்கையை கடைபிடித்து வரும் திமுக கடந்த சில வாரங்களாக கடவுள் குறித்து பாசிட்டிவான கருத்துக்களை தெரிவித்து வருகிறது. குறிப்பாக ஆன்மீகம் விவேகானந்தர் போன்ற வார்த்தைகளெல்லாம் திமுக தலைவர் முக ஸ்டாலின் வாயிலிருந்து வந்து கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து கூறியதாவது: திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டதால் ஆன்மீகம் விவேகானந்தர் என்றெல்லாம் பேசுகிறார். கடவுள் இல்லை என்று இனியும் சொன்னால் மக்கள் ஓட்டு போட மாட்டார்கள் என ஸ்டாலினுக்கு தெரிந்து விட்டது என்று கூறியுள்ளார் 
 
எல் முருகனின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் முருகனின் இந்த கருத்துக்கு விரைவில் திமுக தரப்பில் இருந்து பதிலடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் செந்தில் பாலாஜி ஜாமின் மனு முடித்துவைப்பு.. நீதிபதி கூறியது என்ன?

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி யோசனை!

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா: அரசு டாக்டர்கள்

மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments