Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை !

Webdunia
திங்கள், 13 மார்ச் 2023 (21:30 IST)
மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடைவிழாவை முன்னிட்டு நாளை கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவங்களுக்கு  மார்ச் 14 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உலகப் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் மாசிக் கொடைவிழா நடத்தப்படுவது வழக்கம்.

இந்த  ஆண்டும் மாசிக் கொடைவிழா வரும் மார்ச் 14 ஆம் தேதி( நாளை) நடைபெறவுள்ளது. எனவே, அரசுக் கருவூலங்கள், அத்தியாவசிய பணிகள் தவிர, நாளை அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

எனினும், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு திட்டமிட்டபடி தேர்வுகள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை தினத்திற்குப் பதில், வரும் மே மாதம்  13 ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்து கோவிலுக்குள் நுழைந்து தேவி சிலை மீது சிறுநீர் கழித்த வாலிபர்.. பெரும் கொந்தளிப்பு..!

மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த இஸ்லாமிய பெண் கைது.. விசாரணையில் திடுக் தகவல்..!

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments