Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவ குழுவின் பரிந்துரையில் தமிழகத்தில் நீட்டிக்கும் ஊரடங்கு???

Webdunia
சனி, 30 மே 2020 (14:39 IST)
ஊரடங்கை நீட்டிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நிறைவு. 
 
இந்தியாவில் மார்ச் 24 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு மூன்று முறை நீட்டிக்கப்பட்டு தற்போது மே 31 ஆம் தேதி வரையிலான நான்காவது ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு நாளையோடு முடிய இருக்கும் நிலையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. 
 
தினசரி 700 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதைய தமிழக எண்ணிக்கை 20,000-த்தை தாண்டியுள்ளது இதனால் எப்படியும் மேலும் இரு வாரங்களுக்காவது ஊரடங்கு நீட்டிக்கப்படும் என சொல்லப்படுகிறது.
 
இந்நிலையில் இன்று மீண்டும் இரண்டாவது முறையாக வீடியோ கான்பரன்ஸிங் மூலமாக மருத்துவர் குழுவை முதல்வர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை முடிந்துள்ள நிலையில் முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசித்த மருத்துவ வல்லுநர் குழுவின் பிரதிநிதியான பிரதீப் கவுர் பேட்டி அளித்துள்ளார். 
 
அவர் கூறியதாவது, சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் மட்டுமே கொரோனா அதிகமாக உள்ளது. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பில் 77% சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டுமே உள்ளது. 
 
எனவே, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். பிற மாவட்டங்களுக்கு தளர்வுகளை தர பரிந்துரைத்துள்ள நிலையில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீக்கப்பட்ட அதே வீடியோ மீண்டும் திருமாவளவன் எக்ஸ் பக்கத்தில்.. பெரும் பரபரப்பு..!

அன்னபூர்ணா சீனிவாசன் வீடியோவை வெளியிட்ட பாஜக நிர்வாகி.. கட்சியில் இருந்து நீக்கம்..!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு.! ஆளுநர் அதிகாரம் குறித்த கேள்வியால் சர்ச்சை..!

வீட்டில் பிறந்த கன்று குட்டி.! தூக்கி கொஞ்சிய பிரதமர் மோடி.!

புனித நகரங்கள், புனித தலங்களில் மது, இறைச்சிக்கு தடை.. மத்திய பிரதேச முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments