லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கட்டுக்கட்டாக ரூபாய் 8.25 கோடி பணம் சிக்கியது. இதில் 5 கோடி ரூபாய் பணத்துக்கு உரிய ஆவணம் இல்லை என்று தெரியவந்துள்ளது.
வெள்ளக்கிணறுவில் உள்ள மார்ட்டின் என்பவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் நடத்தினர். அங்கு வீட்டின் மேல் புரத்தில் கூரையில் ரகசிய அறை ஒன்று இருந்துள்ளது. அங்கு செல்வதற்கு ரகசிய படிக்கட்டின் வழியே தான் செல்ல முடியும் என்பதால் அதிகாரிகள் அதைக் கண்டுபிடித்தனர்.
பின்னர் அந்தப் படிக்கட்டில் சென்று சோதனை நடத்தினர். அங்கு பல துணிப்பைகளில் 2000, 500, 200, 20 ரூபாய் நோட்டுக் கட்டுகளைக் கண்டுபிடித்து அவற்றைப் பறிமுதல் செய்தனர்.
மேலும் அறையில் இருந்த கட்டில்களுக்கு அடியில் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.