வங்கக்கடலில் ஏற்பட்ட வானிலை மாற்றங்கள் காரணமாக, தற்போது குமரிக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளையில், அந்தமான் கடலில் நிலவும் மற்றொரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று, அடுத்த 3 நாட்களில் 'சென்யார்' புயலாக மாறக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் நவம்பர் 25 முதல் நவம்பர் 30 வரை மிதமான மழை முதல் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. நவம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தென் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நவம்பர் 29 அன்று சென்னைக்கு மிக பலத்த மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.