குமரிக்கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை!

Mahendran
செவ்வாய், 25 நவம்பர் 2025 (11:15 IST)
வங்கக்கடலில் ஏற்பட்ட வானிலை மாற்றங்கள் காரணமாக, தற்போது குமரிக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதேவேளையில், அந்தமான் கடலில் நிலவும் மற்றொரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று, அடுத்த 3 நாட்களில் 'சென்யார்' புயலாக மாறக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
இதன் காரணமாக தமிழகத்தில் நவம்பர் 25 முதல் நவம்பர் 30 வரை மிதமான மழை முதல் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. நவம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தென் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நவம்பர் 29 அன்று சென்னைக்கு மிக பலத்த மழைக்கான ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிகரெட் லைட்டரை தர மறுத்ததால் இளைஞர் படுகொலை! தப்பியோடிய மர்ம நபர்கள்..!

தவெகவில் இணைகிறாரா செங்கோட்டையன்?!... அரசியல் பரபர!...

எத்தியோப்பியாவில் 10,000 ஆண்டுகளுக்கு பின் வெடித்த எரிமலை.. டெல்லியை எட்டிய சாம்பல் மேகம்..!

சிறிய அளவில் உயர்ந்த பங்குச்சந்தை.. நேற்று போல் ஏமாற்றம் தருமா?

இன்று ஒரே நாளில் 1600 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் ரூ.94,000ஐ நெருங்குவதால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments