Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சினிமாவில் நடிப்பது மட்டும் அரசியலுக்கு தகுதியாகாது: விஜய்யை விமர்சித்த மதுரை ஆதினம்..

Advertiesment
Madurai adheenam

Mahendran

, புதன், 2 ஏப்ரல் 2025 (11:49 IST)
சினிமாவில் நடிப்பது மட்டுமே அரசியலுக்கு தகுதி ஆகாது என்று மதுரை ஆதீனம், நடிகர் விஜய் குறித்து மறைமுகமாக விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், வரும் 2026 ஆம் ஆண்டு அவரது கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மதுரை ஆதீனம், "அரசியல் என்பது யார் வேண்டுமானாலும் வரக்கூடியது இல்லை. கடுமையாக உழைத்து, மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து, அனுபவம் பெற்றவர்கள் மட்டுமே அரசியலுக்கு வரவேண்டும். 
 
சினிமா  சினிமாவாகவே இருக்க வேண்டும். சினிமாவில் நடிப்பது மட்டுமே அரசியலுக்கு தகுதி என்று நினைப்பது தவறு. மக்களுக்காக தொண்டு செய்வதுதான் அரசியல். மக்களுக்காக பல்வேறு துறைகளில் தொண்டு செய்யக்கூடியவர்கள் போற்றப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.
 
அவருடைய இந்த கருத்து, விஜய்யை நேரடியாக குறிப்பிடாமல் இருந்தாலும், அவரை மனதில் வைத்து சொல்லப்பட்டதாக கூறப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மசோதா நிறைவேறினால் வக்பு நிலங்களை பாஜக விற்கும்: அகிலேஷ் யாதவ்