Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திர வங்கி ஊழியருக்கு கொரோனா: 3 நாட்கள் விடுமுறை என அறிவிப்பு!

Webdunia
வியாழன், 8 ஏப்ரல் 2021 (11:15 IST)
மதுரையில் உள்ள ஆந்திரா வங்கி ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த வங்கிக்கு மூன்று நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
மதுரையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் தெருக்களை சீல் வைக்க மதுரை மாநகராட்சி இன்று முடிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது .
 
இந்த நிலையில் மதுரையில் கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து அதனை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் மதுரையில் உள்ள ஆந்திர வங்கி ஊழியர் ஒருவருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனை அடுத்து அந்த வங்கிக்கு 3 நாள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது .
 
வங்கி முழுவதும் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தப்படும் என்றும் அதன் பிறகே வங்கி திறக்கப்படும் என்றும் அதுவரை வங்கி வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள கிளைகளை பயன்படுத்திக்கொள்ள வங்கி மேலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரையில் உள்ள ஆந்திர வங்கி ஊழியருக்கு கொரோனா என்ற தகவல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

நிலம் கையகப்படுத்தும் விவகாரம்: மாவட்ட ஆட்சியரை ஓட ஓட விரட்டிய பொதுமக்கள்..

ஆட்சி மாறினால் கலைஞர் சிலைகள் உடைக்கப்படும்? - சீமான் பேச்சால் சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments