Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரையை அச்சுறுத்தும் டெங்கு காய்ச்சல்; சிறுவன் பலியால் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 22 ஜனவரி 2021 (12:15 IST)
கொரோனாவை தொடர்ந்து மதுரையில் பரவியுள்ள டெங்கு காய்ச்சலால் சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பிலிரிந்தே நாடு இன்னும் மீளாத சூழலில் பறவைக்காய்ச்சல் போன்ற புதிய வியாதிகளும் பரவி வருவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மதுரையில் பரவியுள்ள டெங்கு காய்ச்சல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகராட்சி ஆலங்குளம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுவன் திருமலேஷ் டெங்கு பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதை தொடர்ந்து இறந்த சிறுவனின் சகோதரனுக்கும் டெங்கு கண்டறியப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் மதுரையில் டெங்கு பரவாமல் இருக்க கொசு உற்பத்தியாவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துவிட்டாரா? மசோதாவை தாக்கல் செய்த வேறொரு அமைச்சர்..!

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு: இந்தியா கொடுத்த பதிலடி..!

சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்..!

கோவைக்கு விஜய் வருகை.. மேள தாளத்துடன் வரவேற்கும் தொண்டர்கள்..!

இதுமாதிரி மறுபடியும் செய்யனும்ன்னு கனவில் கூட நினைக்க கூடாது: பஹல்காம் தாக்குதல் குறித்து ரஜினி..!

அடுத்த கட்டுரையில்
Show comments