பிராங்க் ஷோக்களை எடுக்கவும் அதை ஒளிப்பரப்பவும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
உலகம் முழுவதும் பிராங்க் ஷோ எனப்படும் வீடியோக்கள் எடுத்து ஒளிப்பரப்புவது இப்போது வைரலாகி வருகிறது. இதில் சம்மந்தப்பட்டவர்களுக்குத் தெரியாமல் எடுக்கப்படும் சில வீடியோக்களால் பொதுமக்களுக்கு அதிர்ச்சியும் மனநிலை மாற்றமும் ஏற்படுகிறது எனக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், முத்துக்குமார் என்பவர் தாக்கல்செய்த மனுவில் டிக்டாக் மற்றும் மியூசிக்கலி போன்ற செயலிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது போன்ற செயலிகளை தடை செய்வது குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்யவேண்டுமென உத்தரவிட்டார்.
இதன் பின்னர் பிராங்க் ஷோ அல்லது குறும்பு வீடியோக்கள் எனப்படும் தனிநபரின் முன்னனுதி இன்றி எடுக்கப்படும் வீடியோக்களையும் அதனை தொலைக்காட்சி மற்றும் இணையதளங்களில் பரப்புவதற்கும் எதிராக வாதம் வழக்கறிஞர்களால் வைக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதிகள் பிராங்க் ஷோக்களுக்கு தமிழகத்தில் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.