Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!

Webdunia
திங்கள், 23 மே 2022 (16:00 IST)
முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ரெயில்வே ஊழியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் நேற்றிரவு 11.30 மணிக்கு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒருவர் போன் செய்து, முதல்வர் ஸ்டாலின் வீட்டின் குண்டுவெடிக்கும் என்று கூறிவிட்டு போனை துண்டித்தார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கட்டுப்பாட்டு அறைக்காவலர்கள் இதுகுறித்து தேனாம்பேட்டை காவலர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக, போலீஸார் ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்ரு அதிரடி சோதனை செய்தனர்.

ஆனால் அங்கு சந்தேகம் கொள்ளும்படி எந்தப் பொருட்களும் இல்லை. இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், அன்டஹ் போன் நம்பரை வைத்து யார் போன் செய்து மிரட்டல் விடுத்தது என்ற தகவல் சேகரித்த போலீஸார், தென் காசி மாவட்டம் ஆழ்வார் குறிச்சியை சேர்ந்த அந்தோணி ராஜ் என்பதும், அவர்  நிலப்பிரச்சனை குறித்துப் போலீஸில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்க காலம் தாழ்த்தியதாகத் தெரிகிறது.இதனால் போலீஸாருக்கு தன் மீது கவனம் ஏற்படுத்தும்   நோக்கில், முதலமைச்சர் வீட்டிற்கு மிரட்டல் விடுத்தது விசாரணையில் தெரியவந்தது. தற்போது அவரைக் கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவர்களின் கோரிக்கைகள்.. அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை..!

டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும்: தமிழிசை

மருத்துவர்கள் தாக்கப்படும்போது நடவடிக்கை எடுக்காததால் இன்னொரு சம்பவம்: அண்ணாமலை

புல்டோசர் வழக்கு: சொத்துகளை இடிக்கவழிக்காட்டு நெறிமுறைகள்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.. மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் குறித்து ஈபிஎஸ்..

அடுத்த கட்டுரையில்
Show comments