Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதைக்காக வார்னிஷைக் குடித்த இளைஞர் பலி – செங்கல்பட்டில் அதிர்ச்சி!

Webdunia
ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (15:13 IST)
தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் செங்கல் பட்டில் வார்னிஷைக் குடித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளைத் தவிர மற்ற அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதன் ஒரு பக்கமாக தமிழகத்தில் செயல்பட்டு வந்த சாராயக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 12 நாட்கள் முடிந்துள்ள நிலையில் குடிமகன்கள் குடிக்காமல் இருக்க முடியாமல் கடைகளுக்குள் புகுந்து திருடும் சம்பவங்களும் நடந்துள்ளன.

அதுமட்டுமில்லாமல் தமிழகம் மற்றும் கேரளாவில் இதுவரை மது கிடைக்காத மன உளைச்சலில் 10 க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் செங்கல்பட்டைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் மது குடிக்க முடியாத விரக்தியில் குளிர்பானத்தில் வார்னிஷை கலந்து குடித்த ஓட்டுநர் சிவராமன் உயிரிழந்துள்ளார். இது அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரு தினங்களுக்கு முன்னதாக இதுபோல புதுக்கோட்டையில் குளிர்பானத்தில் ஷேவிங் லோஷஷை கலந்து குடித்த 2 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments