Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

Webdunia
வெள்ளி, 25 ஜூன் 2021 (15:52 IST)
முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீன் மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி பாலியல் குற்றச்சாட்டு கூறியதை அடுத்து அமைச்சர் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில் அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது
 
இந்த நிலையில் சமீபத்தில் மணிகண்டன் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து அவர் தன்னை ஜாமினில் விடுவிக்க வேண்டுமென சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்
 
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது காவலர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டிருப்பதாகவும் எனவே அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சற்று முன்னர் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் ஆப்பிள் தொழிற்சாலை அமைவதை நான் விரும்பவில்லை: டிரம்ப்

பாகிஸ்தான் போன்ற நாட்டிற்கு அணு ஆயுதம் தேவையா? உலக நாடுகளுக்கு ராஜ்நாத் சிங் கேள்வி..!

ரூ.7 கோடி நிதி ஒதுக்கி மகளிர் உரிமைத்தொகை எப்படி கொடுக்க முடியும்: ராமதாஸ் கேள்வி..!

எனது உயிருக்கு ஆபத்து.. சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்த கவுதமி..!

குடை ரெடியா? இன்று 4 மாவட்டங்கள்.. நாளை 7 மாவட்டங்கள்! - கனமழை அலெர்ட்!

அடுத்த கட்டுரையில்