Publish Date: Mon, 27 Nov 2023 (11:26 IST)
Updated Date: Mon, 27 Nov 2023 (11:28 IST)
கரூர் அருகே உள்ள பொறியியல் கல்லூரி மாணவர் கழுத்தை எம்பிஏ மாணவர் அறுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலையில் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வரும் மாணவர் நிதிஷ்குமார் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பொறியியல் கல்லூரியின் மாணவர் நிதிஷ்குமாரின் கழுத்தை எம்பிஏ மாணவர் அண்ணாமலை அறுத்ததாக தெரிகிறது.
இதனால் படுகாயம் அடைந்த பொறியியல் கல்லூரி மாணவர் நிதிஷ்குமார் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனை அடுத்து கழுத்தை அறுத்த எம்பிஏ மாணவர் அண்ணாமலையை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.