Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடி ஆட்சியை டிஸ்மிஸ் செய்யுங்கள், நான் முதல்வரானால் ஒரே வாரத்தில் கொரோனாவை ஒழிப்பேன்:மீராமிதுன்

Webdunia
வியாழன், 18 ஜூன் 2020 (07:38 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி ஆட்சியை டிஸ்மிஸ் செய்து என்னை முதல்வராக்கினால் ஒரே வாரத்தில் கொரோனாவை ஒழிப்பேன் என்றும் நடிகையும் பிக்பாஸ் போட்டியாளருமான மீராமிதுன் தனது டுவிட்டரில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
கொரோனாவை விரட்டி பொதுமக்களை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உள்பட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான மீராமிதுன் தனது டுவிட்டரில் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
தற்போதைய தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த தவறிவிட்டதாகவும், இதனால் பிரதமர் தமிழக அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் கூறிய மீராமிதுன், தன்னை தமிழக முதல்வராக ஆக்கினால் ஒரே வாரத்தில் கொரோனாவை தமிழகத்தில் இருந்து விரட்டுவேன் என்றும் கூறியுள்ளார்
 
அதுமட்டுமின்றி தமிழகத்தில் உள்ள கிரிமினல்கள் அனைவரையும் ஒரே மாதத்தில் ஜெயிலுக்குள் தள்ளுவேன் என்றும், தமிழகத்தை ஊழல் இல்லாத மாநிலமாக மூன்றே மாதத்தில் மாற்றுவேன் என்றும், இந்திய பொருளாதாரத்தையே ஆறு மாதத்தில் உயர்த்துவேன் என்றும் அவர் கூறியுள்ளார்
 
மேலும் தமிழக அமைச்சர்கள் அனைவரும் ஊழல்வாதிகள் என்றும், நான் பிஎஸ்ஸி மைக்ரோபயாலஜி படித்துள்ளேன் என்றும் எம்.எஸ்.ஸி பயோடெக்னாலஜி படித்துள்ளேன் என்றும் பிரதமர் மோடி தனக்கு ஒரு வாய்ப்பு அளித்தால் நான் என்னுடைய தாய்நாட்டை காப்பேன் என்றும் மீராமிதுன் கூறியுள்ளார்.
 
மீராமிதுனின் இந்த டுவிட்டுக்கு பெரும்பாலான நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இந்தியர்களுக்கு நிரந்தர தடையா? அதிர்ச்சி தகவல்..!

அரபிக்கடலில் புயல் சின்னம் ஏற்பட வாய்ப்பு.. தமிழகத்தில் கனமழை பெய்யுமா?

தமிழகத்தில் ஜூலை முதல் மின் கட்டணம் உயர்வா? மின்சார வாரிய அதிகாரிகள் சொல்வது என்ன?

நள்ளிரவு முதல் விட்டுவிட்டு மழை: ஊட்டி போல் மாறிய சென்னை..!

நிதி வேண்டும் என்றால் 11 நிபந்தனைகளை ஏற்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு IMF நிபந்தனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments