Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஃபீஸ் பக்கம் தல வச்சி கூட படுத்துறாதீங்க... பாஜக கெடுபிடி!!

Webdunia
வெள்ளி, 20 மார்ச் 2020 (14:58 IST)
கொரோனா பீதியால் தொண்டர்கள் நிர்வாகிகள் யாரும் அலுவலகத்திற்கு வரவேண்டாம் என தமிழக பாஜக பொது செயலாளர் தெரிவித்துள்ளார். 
 
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இந்தியாவும் மெல்ல பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 206 ஆக உயர்ந்துள்ளது. 5 பேர் இதுவரை மரணித்துள்ளனர். 
 
பள்ளி, கல்லூரி, மால் என அனைத்தும் மார்ச் 31 ஆம் தேதி அவரை திறக்கப்பட கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் தமிழக பாஜக பொது செயலாளர் கே.எஸ்.நரேந்திரன் பாஜக தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்... 
 
கொரோனா வைரஸ் பரவி வருவதால் மறு அறிவிப்பு வரும் வரை மாநில தலைமை அலுவலகத்தில் தலைவர்கள் சந்திப்புகள் நடைபெறாது. எனவே, தொண்டர்கள் பாஜக ஆபீசுக்கு வருவதையும், தலைவர்களின் வீட்டிற்கு செல்வதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என கோரியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments