Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடை பிடித்து வந்தால் மட்டுமே டாஸ்மாக்கில் சரக்கு! மாவட்ட நிர்வாகம் அதிரடி!

Webdunia
செவ்வாய், 5 மே 2020 (17:35 IST)
திருப்பூரில் குடை பிடித்து சமூக இடைவெளிக் கடைபிடிப்பவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக்கில் ஆல்கஹால் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17 வரை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன.  தமிழகத்திலும் மே 7 முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள சூழலில் டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என பலர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும் மதுக்கடைகள் திறக்க இருப்பதால் மது பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டாலும் சமூக இடைவெளியை ஒழுங்காக கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதில் அரசு தீவிரமாக உள்ளது. இந்நிலையில் திருப்பூரில் சமூக இடைவெளியைக் கடைபிடித்து குடை பிடித்து வருபவர்களுக்கு மட்டுமே மது வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments